ADVERTISEMENT

அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டோம்... பேச மாட்டோம்... -ஆர்.பி.உதயகுமார்

01:04 PM Sep 19, 2020 | rajavel

ADVERTISEMENT

அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் 18.09.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் உயர்மட்ட குழு நிர்வாகிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர். உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம், தேர்தலுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் அதிமுகவில் அறிவிக்கப்படுமா? அதிமுக ஒற்றை தலைமையில் கீழ்தான் இதுவரை தேர்தலை சந்தித்திருக்கிறது. இரட்டை தலைமையை... என்று கேள்வி முடிப்பதற்குள்,

''தலைமை இதுகுறித்தெல்லாம் பேசக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக தொண்டர்களில் நானும் ஒருத்தன். தலைமை ஒரு உத்தரவிடுகிறது என்றால் அதற்கு கட்டுப்பட்டால்தானே நான் பதவியில் இருக்க முடியும். மைக் கிடைச்சிருச்சின்னு கண்டதையெல்லாம் பேச முடியாது... அப்புறம் வீட்டுக்குத்தான் நாங்க போகணும். பேச முடியாது. கருத்து சொல்ல முடியாது, கருத்து சொல்லக்கூடாது. அது எல்லையைத் தாண்டியதாக வரும். பேச மாட்டோம், அதைப் பற்றியே பேச மாட்டோம். அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டோம்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT