ADVERTISEMENT

மோடியின் வருகை அதிமுகவில் மாற்றத்தை உண்டாக்குமா? 

06:23 PM Feb 01, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டசபைக்கான தேர்தல் நெருங்கும் நேரத்தில், தேசிய கட்சித் தலைவர்கள் தமிழகம் வரத் தொடங்கியுள்ள நிலையில், வருகின்ற 14ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்த வருகை, அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், ஜெ. பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசியின் ஆரம்ப வருகையே, அதிமுகவின் அலறல் சத்தமாக ஜெயகுமார், சி.வி. சண்முகத்தின் மூலம் வெளிப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் இது வரையிலும் வாய்திறக்காமல் மெளனம் காத்தது, ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே போல ஐடி விங், சட்டப்பிரிவு என தனித்தனியே வழக்கறிஞர்கள் இருக்கும் பட்சத்தில், ஏன் ஒரு வழக்குகள் கூட சசிகலா மீது பதிவு செய்யவில்லை என்ற கேள்விகளுக்கு மோடியின் வருகையே அதற்கான பதிலாக இருக்கும் எனப் பேசப்படுகிறது.

தமிழக தேர்தலில் திமுகவுக்கு போட்டியாக அதிமுகதான் இருக்கும் என்ற சூழ்நிலையில், தற்போது அதிமுக நிலை வலுவிழந்து கிடக்கிறது. இந்தச் சூழலில், திமுகவை வீழ்த்த அதிமுகவின் ஒற்றுமை தேவைப்படுகிறது என்று நினைத்த பாஜக, 14 ஆம் தேதி தொடக்க விழாவைத் தாண்டி, மோடியின் வருகை அதிமுகவின் இந்த ஒருங்கிணைப்பைச் சார்ந்தே அமைந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT