ADVERTISEMENT

“இப்படியெல்லாம் பண்ணுனா இது என்ன நல்ல ஆட்சியா?” - திமுகவுக்கு எதிராக கொந்தளித்த ராஜேந்திரபாலாஜி

08:15 PM Jan 21, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விருதுநகரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தன் மனக்குமுறலை வெளிப்படையாகக் கொட்டிவிட்டார்.

அவர் பேசுகையில், “திமுகவை யார் யாரெல்லாம் எதிர்க்கிறாங்களோ, அவங்க மேல வழக்கு போட ரெடியா இருக்காங்க. ஒன்னுமே இல்லாத கேஸ என்மேல போட்டு, ஒரு ஆயிரம் போலீஸ வச்சு விரட்டுனாங்க. நானும் 21 நாள் அப்படியே டமிக்கி டிமிக்கின்னு ஆடிப் பார்த்தேன். அங்கிட்டும் இங்கிட்டும் வருவாங்க வருவாங்கன்னு பார்த்துட்டு, விட்டுவிளாசி டப்புன்னு அங்கிட்டு போயிருவேன். 2 நிமிஷத்துல 3 நிமிஷத்துல தப்பிச்சி போயிருவேன். இந்த வேலைதான் நடந்துச்சு. எல்லாம் டகால்டி வேலைதான். எனக்குள்ள ஒரே பலவீனம் எங்கயாவாது பெரிய கோவில் இருந்தா, அங்க சாமி கும்பிட போயிருவேன். கரெக்ட்டா அங்க அன்னைக்கு சாமி கும்பிட வருவான்னு கணக்கு பண்ணி ரெடியா நின்னுட்டாங்க. நல்லா சாமியார் வேஷ்டி கட்டி சாமி கும்பிட போனேன். அதுனால ஒன்னும் இல்ல. திமுக வந்தா புடிச்சி உள்ள வைப்பாங்கன்னு தெரியும். ஏன்னா நான் அவ்ளோ பேசிருக்கேன். சிறப்பா பேசிருக்கேன். ரொம்ப ரொம்ப சிறப்பா பேசிருக்கேன். அதுனால அவங்க புடிச்சி உள்ள போடணும்னு நெனச்சாங்க. புடிச்சி உள்ள போட்டாங்க.

ஜெயில்ல ஒரு ஊறுகா மட்ட கூட கொடுக்காம வச்சிக்கிட்டாங்க. பாதுகாப்பா வச்சிகிட்டாங்க. சுப்ரீம் கோர்ட் பெயில்ல வெளிய வந்தேன். இதுனால என்ன ஆயிடப்போகுது? கொன்னா போட முடியும் நீங்க? அண்ணாதிமுக தொண்டன அழிச்சிற முடியாதுல? நாளைக்கு இதே நெலம உங்களுக்கு திரும்பாதா? நெலம எப்ப வேணும்னாலும் திரும்பலாம். நான் பத்து வருஷம் மந்திரியா இருந்தேன். 15 வருஷம் நகராட்சி வைஸ்-சேர்மனா இருந்தேன். எத்தனை மந்திரிசபை கூட்டத்துல கலந்திருப்பேன்? எத்தனை கலெக்ட்ரேட் மீட்டிங் நடத்திருப்பேன். மந்திரியா இருந்தவங்க மேலயே இப்படி பொய்வழக்கு போட்டீங்கன்னா.., இதேமாதிரி நாளைக்கு நாங்களும் பண்ணுனா என்ன ஆகும்?

இன்னைக்கு முதலமைச்சரா இருக்கிற ஸ்டாலினுக்கு பழிவாங்கணுங்கிற எண்ணம்தான் இருக்கு. பழிவாங்கணும்., அண்ணாதிமுகவுல வேகமா இருக்கிற அமைச்சர்கள பழிவாங்கணும். உள்ள வைக்கணும். இன்னைக்கும் நான் வந்து கண்டிஷன் பெயில்லதான் இருக்கேன். இந்த மாவட்டத்தவிட்டு நான் வெளியே போகணும்னா காவல்துறைக்கு தகவல் சொல்லிட்டு, லெட்டர் கொடுத்துட்டுத்தான் போகமுடியும். ஒரு வருஷம் ஆச்சு. என்னைய என்னமோ சந்தனவீரப்பன பிடிச்ச மாதிரி விரட்டி விரட்டிட்டு திரியுறாங்க. இப்படியெல்லாம் பண்ணுனா இது என்ன நல்ல ஆட்சியா?” என்று கொந்தளிந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT