ADVERTISEMENT

“அண்ணே நூறு இல்ல ஆயிரம் ” – பிரச்சாரத்தில் குழம்பிய செல்லூர் ராஜு 

10:20 AM Apr 06, 2019 | Anonymous (not verified)

பரபரப்பாக காட்சியளிக்கும் தேர்தல் களத்தில் அணைத்துக் கட்சியினரும் தொடர்சியாக தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க. கட்சியின் முக்கியக் தலைக் கட்டுகள் பிரச்சாரக் களத்தில் குதிக்கும் போது மட்டும் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்று பெருத்த எதிபார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் மதுரையின் அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.ஆர் ராஜ் சத்தியனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுரை பசுமலையில் தொடங்கிய பிரச்சாரம் எட்டு கட்டங்களாக நடந்து புதூர் பேருந்து நிலையத்தில் பொதுக் கூட்டத்துடன் நிறைவு பெற்றது பிரச்சாரப் பயணம்.

ADVERTISEMENT



இதில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “இக் கூட்டத்தை பொண் எழுத்துகளால் பொரிக்க வேண்டும்“ என்று எழுச்சியுடன் ஆரம்பித்தார் மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை “ பேட்டை ரவுடியை போல பேசத் தெரியாமல் பேசிவிட்டார்” என்றும் இரட்டை இலைக்கே உங்கள் வாக்குகளை செலுத்துமாறும் சுருக்கமாக முடித்துக் கொன்டார்.

ADVERTISEMENT



“என்ன கம்முனு இருக்கீங்க, மதுரைனாலே அதிரனும்ல, அண்ணன் எடப்பாடி வந்துருக்காறு எல்லாம் ஜோரா கை தட்டுங்க” என்று கூட்டத்தை உற்சாகப்படுத்தியபடி பேசத் தொடங்கிய செல்லூர் ராஜு “மோடியால் மட்டுமே நாட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க முடியும், அவர் ஒரு இந்தியன் ஸ்டார், கருப்பு பணத்தை ஒழித்தவர்” பதவி வெறி மோடியின் ரஃபேல் ஊழலை அமைச்சரின் கண்களில் இருந்து மறைக்க “மோடியின் ஐந்தாண்டு ஊழலற்ற ஆட்சி மீண்டும் வர வேண்டும்” என்றார், வழக்கம் போல் உளறிய செல்லூர் ராஜு “எடப்பாடி அரசு பொங்கல் பரிசாக வழங்கிய நூறு ருபாய் என்று ” பல முறை கூறிவிட அருகில் இருந்த தொண்டர் ஒருவர் “அண்ணேன் நூறு இல்ல ஆயிரம் ” என்று அரங்கம் அதிரும் குரலில் கூற, கேட்டுக் கொண்ட அமைச்சர் மாற்றி மீண்டும் “ஆயிரம் ரூபாய்” என்றார், ஸ்டாலினை பற்றி பேசிய அமைச்சர் “தி.முக.வின் நான்காம் தர பேச்சாளர் போல பேசிக் கொண்டிருக்கும் அவரது பேச்சை அவர்’ வீட்டு நாய் கூட கேட்காது, நாடு பா.ஜ.க மயமாக வேண்டும்” என்று நகைப்புடன் கூறி முடித்துக் கொண்டார்.



இறுதியாக உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி தொண்டை கட்டியதால் “என்னால சரியா பேச முடியாது கோச்சுக்காதிங்க” என்று ஆரம்பித்த முதல்வர் “நாட்டின் பாதுகாப்பு முக்கியம் அதை மோடியால் மட்டுமே சிறப்பாக கொடுக்க முடியும்” என்றும் “மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா, என அனைவரும் பிரதமர் ஆகா வேண்டும் என்று ஆசை படுகின்ற, பிரமதர் வேட்பாளரையே இன்னும் அறிவிக்காத ஒருமித்த கருத்து இல்லாத காங்ரஸிடம் கூட்டணி வைத்துள்ளார் ஸ்டாலின் என்றும் “9500 வீடுகள் தோப்பூரில் உள்ள உச்சிபெட்டியில் கட்டி தரப்படும், கிராமங்களுக்கு இணையதள சேவை அளிக்கப்படும், மேலும் தி.மு.கவின் ஆட்சியில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் வழக்குகள் அனைத்தையும் நாங்கள் வெற்றி பெற்றால் விசாரிப்போம் ” என்று உறுதியளித்து தனது உரையை முடித்துக் கொண்டார்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் ராஜன் செல்லப்பா, ஜமால் மொய்தீன் (வக்பு வாரிய கல்லூரியின் ஊழல் புகாரில் சிக்கியுள்ளவர்), பா.ஜ.க-வின் சசி குமார், சுசீந்திரன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எல்லா ஊரிலும் பிரச்சாரத்தின் போது ஆ.தி.மு.கவினர் மோடியால் மட்டுமே பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று தான் தங்களது பேச்சை ஆரம்பிக்கின்றனர். பா.ஜ.கவினர் தங்கள் பெயருக்கு முன்னால் சௌக்கிதர் என்று சேர்த்துக் கொள்வது போல ஆ.தி.மு.கவினர் மோடியால் தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்னும் சொல்லை உரையின் துவக்கத்தில் சேர்த்துக்கொள்கின்றனர்.

அஹமது அலி .

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT