திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் செய்தியாளர்களை சந்தித்தார் பாராளுமன்ற துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை.

அப்போது அவர்,

Advertisment

ஆட்சிக்கு வர முடியாது என்ற காரணத்தினாலேயே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வருகிறார். மக்களை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே கல்வி கடன் ரத்து என்ற வாக்குறுதியை அவர் அளித்துள்ளார்.

Thambidurai

இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட தி.மு.க.வினால் வெற்றி பெற முடியாது. அதே போல் மத்திய ஆட்சியில் அங்கம் வகிப்பதற்கான பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற முடியாது.

Advertisment

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும், தமிழகத்துக்கு பலன் கிடைக்காமல் போய் விட்டது. தற்போதைய நிலையில் பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை. இவ்வாறு கூறினார்.