ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்தல் அரசியலால் அதிமுக, திமுக தலைமைக்கு ஏற்பட்ட பிரச்னை... அதிருப்தியில் தலைமைகள்!

04:13 PM Dec 23, 2019 | Anonymous (not verified)

அரசியல் எதிரிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட உள்ளாட்சித் தேர்தலில் சீக்ரெட்டாக் கைகோத்து தேர்தல் உடன்பாடு செய்து கொள்வதாக சொல்லப்படுகிறது. தி.மு.க.வில் இருக்கும் மா.செ.க்களும், பவர்ஃபுல் மாஜி மந்திரிகளும் லோக்கலில் இருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களோடு டீலிங் பேசி, அவங்களுக்குள் உடன்பாடுடன் போவதாக கூறுகின்றனர். இது இருதரப்பு கூட்டணிக் கட்சிகளையும் மிரள வைத்துள்ளதாக சொல்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சரான கே.கே.எஸ். எஸ்.ஆரும் இப்போதைய அ.தி. மு.க. அமைச்சரான ராஜேந்திர பாலாஜியும் ரகசியமாக கை கோத்து அதிரடி டீலிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் தொடர்புடைய உள்ளாட்சிப் பதவிகள் தி.மு.க.வுக்கு என்கின்றனர். விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட மற்ற பகுதிகள் அ.தி.மு.க.வுக்கு என்றும் கூறிவருகின்றனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அதனால் முட்டல் மோதல் எதுவும் இல்லாம இருதரப்புக்கும் ஆதாயம் கிடைக்கும் என்று இரு தரப்பும் சந்தோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்ட மன்னார்குடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள சேரன்குளம் டி.டி.வி. தினகரனின் சொந்த ஏரியா என்கின்றனர். இங்கே ஒன்றியக்குழு உறுப்பினருக்கும் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடவில்லை. வேட்டைத் திடல் ஊராட்சியிலும் தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்கியதால் அ.தி.மு.க. சத்தியமூர்த்தி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார் என்கின்றனர். இப்படி கட்சித் தலைமைகளுக்குத் தெரியாமல் லோக்கல்ல இவங்க உருவாக்கும் சீக்ரெட் கூட் டணியால் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளில், கட்சித் தலைமைகள் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT