ADVERTISEMENT

அந்த வீடியோ மட்டும் வெளியிடவில்லை என்றால்... இன்னும் சொல்லாத உண்மைகளையும் சொல்லுவோம்: வேல்முருகன் பேட்டி

05:44 PM Mar 16, 2019 | rajavel

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, ''மத்திய அமைச்சராக தலித் எழுமலை ஆனபோது, அவர் 5 ஆயிரம் கோடி பணத்தை சம்பாதித்து சுவிஸ் வங்கியில் போட்டுக்கொண்டார், எல்லா மெடிக்கல் கல்லூரிகளிலும் லஞ்சம் வாங்கிக்கொண்டார் என்று சொல்லி, அபாண்ட பழியோ, உண்மையோ? அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.

நான் திருப்பி மருத்துவர் ராமதாஸையும், அன்புமணியையும் கேட்கிறேன், ஐந்து ஆண்டு காலமாக நீங்கதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தீர்கள். இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட மெடிக்கல் காலேஜ் இருக்கிறது. ஒவ்வொரு காலேஜ் அனுமதிக்கும் நீங்கள் எத்தனை ஆயிரம் கோடி வாங்கினீர்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் இரண்டு மருத்துவ சீட். அந்த இரண்டு சீட்டை உங்கள் தைலாபுரம் தோட்டத்து வழியாக, ஒவ்வொரு சீட்டும் 20 லட்சம், 30 லட்சம் என விற்றீர்கள். அதில் எத்தனைக்கோடிகள் சம்பாதித்தீர்கள். எல்லா மருத்து கம்பெனிகளிடம் இருந்து எத்தனை சதவீதம் கமிசன் வாங்கினீர்கள். இந்த காசெல்லாம் எங்கே இருக்கிறது.


காடுவெட்டி குரு மருத்துவமனையில் இருக்கிறார். குருவின் தாய் உள்பட அவரது குடும்பத்தினர் ராமதாஸின் காலில் விழுந்து குருவை காப்பாற்ற வேண்டும் என்று கதறினார்கள். அப்போது, தைலாபுரம் தோட்டத்தை திறந்து காட்டி, அங்கு உள்ள தென்னை மரத்தில் இருந்து வரும் தேங்காய், இளநீரை வைத்துத்தான் நானே கஞ்சி குடிக்கிறேன். என்னுகிட்ட எங்கே இருக்கு 50 லட்சம், ஒரு கோடி... குருவை சிங்கப்பூருக்கு இழுத்துப்போறத்துக்கு? என்று அவரது குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார் ராமதாஸ்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது குருவின் குடும்பத்திற்கு உதவி செய்வீர்களா என்றார்கள். நடந்ததை மறந்துவிட்டு குருவின் குடும்பத்தினர் உதவி கேட்டால், சொத்தை விற்றாவது குருவை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல தயார். ஒரு கோடி ரூபாய் ஆகும் என்றார்கள். என் அண்ணன், தம்பி சொத்தை விற்றாவது அதை செய்ய தயாராக இருப்பதாக சொன்னேன். உடனே ராமதாஸ் சென்னை, பாண்டிச்சேரியில் நட்சத்திர ஓட்டலில் கூட்டம் போட்டு என்னை எப்படியெல்லாம் கழுவி ஊத்த வேண்டுமோ அப்படி ஊத்தினார்கள். இரண்டு கோடி வன்னியர்கள் இருக்கிறார்கள். தலைக்கு ஒரு ரூபாய் போட்டாலும் இரண்டு கோடி ரூபாய் வரும். குருவை தனி விமானத்தில் அழைத்துச் சென்று சிங்கப்பூரில் காப்பாற்றுவோம். நீ யாருடா துரோகி என்றார்கள். நான் அதனை பொறுத்துக்கொண்டன்.

ஆனால் இன்று அந்த குரு குடும்பம், ராமதாஸை நம்பி நாங்கள் ஏமாந்து போய்விட்டோம். ராமதாஸை நம்பி மோசம் போய்விட்டோம். குருவின் தங்கை சொல்கிறார், எங்கள் அண்ணன் சாவுக்கு காரணம் மருத்துவர் ராமதாஸ். குருவின் மகன் கனல் சொல்லுகிறார், எங்கள் அப்பாவை மருத்துவ கொலை செய்து விட்டார்கள். குருவின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள்.

வேல்முருகன் சொல்வது உண்மையா? மருத்துவர் ராமதாஸ் குருவுக்கு எந்த உதவியும் செய்யவில்லையா? என்று வன்னியர்கள் மத்தியில் கோபம் எழுகிறது. இணையதளங்களில் விவாதங்கள் எழுகிறது. அப்போது உடனே ராமதாஸ் மருத்துவமனைக்கு சென்று என்ன செய்தார் தெரியுமா? அன்புமணி என்ன செய்தார் தெரியுமா? குரு சுவாசிக்கும் டியூபை எடுத்துவிட்டு, நான் நல்லா இருக்கிறேன், அய்யாதான் எனக்கு செலவு செய்கிறார், அய்யாதான் என்ன பார்க்கிறார் என்று குரு சொல்லுகிற மாதிரி ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். அந்த வீடியோ மட்டும் வெளியிடவில்லை என்றால், குருவின் மறைவுக்கு வந்த ராமதாஸ் பெரிய பாதிப்பை சந்தித்திருப்பார். சந்தித்தார். அன்புமணி விரட்டி தூக்கியடிக்கப்பட்டார். ஜி.கே.மணி அடித்து தூக்கிவீசப்பட்டார். இவையெல்லாம் அங்கு லோக்கலில் ரிப்போர்ட்டாகியிருக்கிறது.

ராமதாஸ் 80களில் தொடங்கி மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வரை போராளி தலைவராகத்தான் இருந்தார். மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தார்கள். மத்திய அரசில் இரண்டு சதவீதம், மாநிலத்தில் 20 சதவீதம், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை பற்றி சோனியா ஆட்சியிலேயோ, வாஜ்பாய் ஆட்சியிலேயோ வாய் திறந்திருக்கிறாரா? ஒருவேளை எனக்கு உடல்நிலைதேறி நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டால் இதையெல்லாம் பற்றி பேசுவேன். நானும், குருவின் குடும்பமும் இன்னும் சொல்லாத உண்மைகளையும் சொல்லுவோம்''. இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT