ADVERTISEMENT

“குமாரசாமியின் அரசு வீழ்த்தப்படும்” - எடியூரப்பா காட்டம்

10:46 AM Jul 18, 2019 | santhoshkumar

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி, சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியுள்ளது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு தன்னுடைய பலத்தை காட்ட இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதாக கூறி இருந்தது. காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதற்காக எடியூரப்பா, சித்தராமையா, குமாரசாமி என்று பல எம்.எல்.ஏ க்கள் வருகை தந்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் காங். எம்.எல்.ஏ க்கள் இன்று நடைபெறும் நம்பிக்கை தீர்மானத்தில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டசபை வந்தடைந்த எடியூரப்பா செய்தியாளர்களிடம், “நாங்கள் 101% நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். எங்களிடம் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர். எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை அவர்களுடைய அரசு வீழ்த்தப்படும்” என்று கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT