கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கடந்த 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் கடந்த செவ்வாய் கிழமை முடிவுக்கு வந்தது.

Advertisment

yedyurappa to take oath as karnataka chief minister by today evening

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு கடந்த செவ்வாய் கிழமை மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

Advertisment

இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பல்வேறு குழப்பங்கள், கூட்டங்களுக்கு பின் இன்று எடியூரப்பா பாஜக சார்பில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.