ADVERTISEMENT

முதல்வராக தொடர்வாரா எடியூரப்பா? தலைமையின் கையில் இறுதி முடிவு!

04:14 PM Jul 17, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக மாநில பாஜகவில் நீண்ட நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக கட்சியில் உள்ளவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே பாஜக மேலிடபொறுப்பாளர் அருண் சிங், எடியூரப்பாவின் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.

இருப்பினும் அதிருப்தி ஓயவில்லை. இந்தநிலையில் எடியூரப்பா, தனத மகன் விஜயேந்திராவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். மாநில விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது.

இருப்பினும் இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசிய எடியூரப்பா, தான் பதவி விலகப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். மாநிலத்தில் தலைமையை மாற்றுவது குறித்து எந்த விவாதமும் எழவில்லை என தெரிவித்தார்.

இருப்பினும் பிரதமருடனான சந்திப்பில், எடியூரப்பா தனது உடல்நிலையை கரணம் காட்டி பதவி விலக முன்வந்ததாகவும், அதற்கு பதிலாக தனது மகனுக்கு மாநில பாஜகவில் முக்கிய பதவி வழங்கவேண்டும் என கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எடியூரப்பாவின் இராஜினாமவை ஏற்பது குறித்து பாஜக மேலிடம் விரைவில் முடிவெடுக்கும் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT