ADVERTISEMENT

நேருவின் மனைவி என பழங்குடியினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் மரணம்

11:51 AM Nov 22, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜார்க்கண்ட மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூதாயத்தை சேர்ந்தவர் புத்னி மஞ்சியன். கடந்த 1959ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அணைக்கட்டு திட்டம் ஒன்றை தொடங்கி வைப்பதற்காக தன்பத் மாவட்டம் அருகே உள்ள பழங்குடியின பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்போது நேரு, பழங்குடியின சமுதாயத்தை கெளரவிக்கும் விதமாக அங்கு நின்று கொண்டிருந்த புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்தார். ஆனால், சந்தால் என அழைக்கப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பெண்ணிற்கு ஆண் மாலை அணிவித்தால் அதை திருமணமாக கருதினர். இந்த நிலையில் தான், முன்னாள் பிரதமர் நேரு, அந்த பெண்ணுக்கு மாலை அணிவித்துள்ளார்.

மேலும், பழங்குடியின சமுதாயம் அல்லாத நேரு, புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்ததால் அந்த பெண்ணை அவர்களுடைய சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால், அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனிலும் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன் பின்னர், ஜார்க்கண்டிற்கு குடிபெயர்ந்த புத்னி, சுதிர் தத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இதற்கிடையே, கடந்த 1985ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் பகுதிக்கு சென்ற போது புத்னி மஞ்சியன் நிலைமையை பற்றி அறிந்தார். அதனால், புத்னிக்கு அவர் வேலை பார்த்த பள்ளத்தாக்கு கழகத்தில் மீண்டும் வேலை வழங்கப்பட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது 80 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT