Advertisment

பண்டித ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாரா சதுக்கத்தில் உள்ள நேரு சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த நேருவின் உருவப்படத்திற்குத்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செய்தார். உடன் அமைச்சர்கள் த.மோ. அன்பரசன், சேகர் பாபு,வெள்ளக்கோயில் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளை முன்னிட்டுகிண்டி கத்திப்பாராவில் உள்ள ஜவஹர்லால் நேரு சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்திற்குத்தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார்.