ADVERTISEMENT

யார் அடுத்த தலைவர்... இன்று கூடுகிறது காங். செயற்குழு!

08:26 AM Oct 16, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (16.10.2021) காலை செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கரோனா சூழல் காரணமாகக் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில், இக்கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடக்க இருக்கிறது. கபில் சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் நடைபெற உள்ள உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும், உட்கட்சித் தேர்தல் குறித்தும் தற்காலிக தலைவர் சோனியா காந்தி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளார். இந்தச் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தெரிவுசெய்வது தொடர்பாகவும் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்காலிக தலைவராகச் சோனியா காந்தி இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT