சமீபத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை நடிகை விஜயசாந்தி சந்த்தித்தார். தெலுங்காகனவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான விஜயசாந்தி சசிகலாவை சந்தித்ததில்ஒரு அரசியல் இருக்கிறது என்கிறது அதிமுக வட்டாரங்கள்.

Advertisment

 Sonia's message to Sasikala !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சோனியா காந்தியோடும், ராகுல் காந்தியோடும் நெருக்கமான உறவை கொண்டுள்ள விஜயசாந்தி மறைந்த ஜெயலிதாவுடனும், சசிகலாவுடனும் நெருக்கமான உறவை வைத்திருந்தார். இவர் சசிகலாவை சந்தித்ததில் உள்ள அரசியல் பற்றி கூறும் மன்னார்குடி வட்டாரங்கள் சோனியா ஒரு செய்தியை சசிகலாவிடம் சொல்லுமாறுவிஜய்சாந்தியிடம் சொல்லி அனுப்பியுள்ளார் என்கிறது.

Advertisment

 Sonia's message to Sasikala !!

பாஜக அதிமுகவுடன் கூட்டுசேர திட்டமிட்டுள்ளது. அதற்கு வலுசேர்க்க சசிகலா தலைமையிலான அணியை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்கிறது. பாஜகவின் இந்த முயற்சி வெற்றிபெற கூடாது. சசிகலா அணி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அடுத்து அமையும் ஆட்சி சசி குடும்பத்திற்கு எதிராக பாஜக எடுக்கும்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும். நீங்கள் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர்கள். பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக நில்லுங்கள். இதுதான் சோனியாகாந்தி சசிகலாவுக்கு கொடுத்த மெசேஜ்.

டிடிவி தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் திருநாவுக்கரசரும் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகி விடாதீர்கள் என அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.