ADVERTISEMENT

பூஸ்டர் தடுப்பூசிக்கு எந்த டோஸ்?

05:34 PM Dec 27, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசிக்குப் பூஸ்டர் டோஸ்களை செலுத்த தொடங்கியுள்ளன. இதனையொட்டி இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில், அண்மையில் இதுதொடர்பாக விவாதிக்க கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். மேலும் 15 முதல் 18 வயது உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தற்போது எந்த கம்பெனி தடுப்பூசி, பூஸ்டர் டோசாக போடப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு மத்திய அரசு தற்போது விளக்கமளித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி எந்த கம்பெனி டோஸ் போடப்பட்டதோ அதே டோஸ் மீண்டும் பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கோவாஸின் போட்டவர்களுக்கு கோவாக்ஸின் டோஸும், கோவிஷீல்டு போட்டவர்களுக்கு அதே மருந்து மீண்டும் போடப்படும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT