ADVERTISEMENT

மாணவர்களுக்காக ஊரடங்கை தளர்த்தும் மேற்குவங்க அரசு...

03:36 PM Sep 11, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தேர்வைக் கருத்தில்கொண்டு நாளை மேற்குவங்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. மாணவர்கள், எதிர்க்கட்சியினர் மற்றும் கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் எழுந்த எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு இந்த தேர்வைச் செப்டம்பர் 13 அன்று நடத்துகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தேர்வைக் கருத்தில்கொண்டு நாளை மேற்குவங்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு ஒரு நாளைக்கு விளக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேற்குவங்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ட்விட்டர் பதிவில், "ஆரம்பத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு இருக்கும் என மேற்குவங்க அரசு அறிவித்திருந்தது. ஆனால்,13 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நீட் 2020 தேர்வைக் கருத்தில்கொண்டு, 12 ஆம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை நீக்குவது குறித்து மாணவர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதனைக் கருத்தில் கொண்டு 12 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT