ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலையை கூடிய விரைவில் திறப்போம்! தலைமை அதிகாரி ராம்நாத் பேட்டி

10:39 AM Jun 07, 2018 | santhoshkumar

ADVERTISEMENT


தூத்துக்குடி ஸ்டெர்லைட காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் நேற்று டெல்லி வந்திருந்தார். அப்போது அங்கு நிருபர்கள் அவரிடம் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடி கலவரம் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர்,

தூத்துக்குடியில் தற்போது போராட்ட அனல் வீசி வருகிறது. அது ஓய்ந்த பின்னர் நாங்கள் சட்டரீதியாக ஆலை திறக்க வழிவகுப்போம். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், சட்டத்தை மீறி எதுவும் செய்ததில்லை. தமிழக அரசு முற்றிலும் எதிராக இருக்கிறது. அங்கிருக்கும் பொதுமக்களிடமும் அவதூறாக எண்களைப் பற்றி பொய் பிரச்சாரங்களை சிலர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT


எங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் நாங்கள் காற்றில் அமிலத்தை கலக்கின்றோம் என்று. ஆனால், நாங்கள் அவ்வாறு செய்வதில்லை கந்தக காற்றை சேமித்துவைத்து அதை வேறு நிறுவனங்களிடம் விற்று காசாக்குகிறோம். தூத்துகுடியில் இருக்கும் அனல் மின்நிலையங்கள் தான் காற்றில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எங்களை காட்டிலும் சுற்றுசூழலை அதிகமாக மாசு படுத்துவது இந்த அனல்மின் நிலையங்கள் தான். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவினால் புற்றுநோய் வருகிறது என்பது பொய்யான ஒரு தகவல்.


எங்களுக்கு எதிராக அப்பாவி பொதுமக்களை முடுக்கி விடுகிறார்கள். சில சமூகவிரோதிகளும், வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கிக்கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்களும் தான் மக்களிடம் பொய்யான பிரச்சாரங்கள் செய்து கலகத்தை உண்டு செய்கிறார்கள்.


எங்களுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை உடைத்து, சட்ட ரீதியாக அணுகி பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை கூடியவிரைவில் திறப்போம் என்றார். ராம்நாத்துடன் மேலும் சில ஸ்டெர்லைட் முக்கிய அதிகாரிகளும் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT