ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலி ஆனார்கள். மேலும் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற நடிகர் கமல், அங்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனைக்கு வெளியே பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உறவினர்கள் கூடியிருந்தனர். மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடிக்கு செல்வதற்கு முன்னதாக கமல்ஹாசன் தனத டுவிட்டர் பக்கத்தில், தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.