ADVERTISEMENT

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க காரணம் உள்ளது! அமலாக்கத்துறை மனு!

05:53 PM Oct 31, 2018 | santhoshkumar

ADVERTISEMENT

ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நியாயமான காரணம் உள்ளது என அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நிதியமைச்சராக ப.சிதம்பரம் செயல்பட்டு வந்தார். இவரின் மகன் கார்த்தி சிதம்பரம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய அமலாக்கத்துறையினர், கடந்த பிப்ரவரி மாதம் அவரைக் கைது செய்துள்ளனர்.

பின்னர், சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க மனு அளித்திருந்தார். அதனை ஏற்று நீதிமன்றமும் ப. சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்திருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை இந்த தடையை எதிர்த்து மனு அளித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க நியாயமான காரணங்களும் உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT