திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை சோனியா காந்தி பார்த்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இது பற்றி கேட்ட போது, சென்ற வாரம் சிதம்பரத்தைப் பார்க்க, காங்கிரஸ் சீனியர் தலைவர்களான கபில் சிபலும், அபிசேக் சிங்வியும் சென்றுள்ளார்கள். சீனியர் மோஸ்ட் வழக்கறிஞர்களான இவர்கள் தான் சிதம்பரத்திற்காக நீதிமன்றங்களிலும் வாதாடி வருகிறார்கள். இவர்களைப் பார்த்த சிதம்பரம், கட்சித் தலைவரான சோனியா தன்னை வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

congress

Advertisment

Advertisment

இந்த விஷயம் சோனியாவிற்கு சென்றதால், 23-ந் தேதி காலை, முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங்கோடு திகார் சிறைக்கு சென்று சிதம்பரத்தை சந்தித்துள்ளார். அப்போது நலம் விசாரித்த சோனியாவிடம், இன்னும் நாற்காலி, தலையணைகளைக் கூட எனக்கு சிறை அதிகாரிகள் தரவில்லை என்று வெளிப்படுத்தியுள்ளார். இதனால் முதுகுவலி அதிகமாக இருப்பதை கூறியுள்ளார் சிதம்பரம். இதனால் வருத்தப்பட்ட சோனியா, "கவலைப்படாதீங்க. சி.பி.ஐ. புனைந்திருக்கும் வழக்கில் நீங்கள் குற்றமற்றவர் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டத்தின் துணையோடு நீங்கள் விரைவில் வெளியே வருவீர்கள்' என்று ஆறுதல் கூறிவிட்டு திரும்பியுள்ளார்.