ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் மம்தாவை வீழ்த்தவே இங்கு வந்தோம்;மம்தா பானர்ஜி மீது அமித்ஷா கடும் தாக்கு

05:22 PM Aug 11, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு வாங்காளத்தில் பலத்தை கட்டமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல போராட்டங்கள் மற்றும் பேரணிகளை பாஜக நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்தவே நாங்கள் இங்கே வந்துள்ளோம். தேசிய குடிமக்கள் பட்டியல் என்பது சட்டவிரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்ற தேவையான ஒன்று. நீங்கள் இறுதிவரை எதிர்த்து கொண்டே இருங்கள் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தேசிய குடிமக்கள் பட்டியல் நடவடிக்கையை கைவிடமாட்டோம்.

இன்று நடக்கும் எங்கள் நிகழ்ச்சியை தொலைகாட்சியில் காணமுடியாதபடி ஒளிபரப்பு தரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிந்தோம். நீங்கள் என்ன செய்தாலும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது. முன்பெல்லாம் இங்கு ரபீந்தர சங்கீதம் கேட்கும் ஆனால் தற்போது குண்டு வெடிக்கும் சத்தங்கள்தான் கேட்கிறது. இதுதான் மம்தாவின் மேற்குவங்கத்தின் நிலை. திரிணாமுல் காங்கிரஸையும், காங்கிரஸையும் வெளியேற்றுவோம் என பகிரங்கமாக மம்தாவை விமர்ச்சித்தார் அமித்ஷா.

ஏற்கனவே அஸ்ஸாமில் தேசியகுடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்ட விவகாரத்தில் அந்த பட்டியல் வெளியீடு வங்கம் பேசுவோருக்கு எதிரானது. அதிகப்படியானோர் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்ற குற்றசாட்டை பாஜக மீது வைத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் ரத்த ஆறு ஓடும் வகையில் பாஜக செயல்படுகிறது என பிரச்சாரம் செய்துவருகிற நிலையில் தற்போது அமித்ஷாவின் இந்த பேச்சால் பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரஸ்க்கும் மோதல் முற்றியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT