தூத்துக்குடி கோவில்பட்டி அடுத்த கயத்தாரில் அமைச்சர் செல்லூர் ராஜுசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின்பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில்,

Advertisment

sellurraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆகியோரிடம்பாஜக மத்தியதலைவர் அமித்ஷா கேட்டுக்கொண்டதின் பேரில் நேற்று நடந்த நம்பிகையில்லா தீர்மானத்திற்கு பாஜகவிற்கு ஆதரவளித்தோம் அதில் மாற்றுக்கருத்து இல்லை. திமுகவை போல ஒரு உறுப்பினர்கள் கூட இல்லாமல் எதிர்க்கிறோம் என்று சொல்லவில்லை.

மாநிலத்தின் நலன்தான் முக்கியம் கட்சியின் நலன் முக்கியமில்லை என்ற நோக்கில்தான் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம். மாநிலத்திற்கு தேவையான அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் இருந்துதங்கு தடையின்றி பெற்றுவருகிறோம் அதனால் ஆதரித்தோம். இதுவே கொள்ளகை ரீதியில் சில எதிர்கருத்துக்கள் வரும்பொழுது கண்டிப்பாக எதிர்த்திருக்கிறோம். அமித்ஷா சொன்னது அதிமுகவில் ஊழல் என்றல்ல தமிழகத்தில் ஊழல் நடக்கிறது என்று. இந்த ஊழலுக்கு திமுகதான் காரணம்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

திமுக ஆட்சியில் நடைபெற்ற 2ஜி ஊழல் வந்தபொழுது அதைகாட்ட இருந்த ஊடகங்கள்குறைவு ஆனால் தற்போது ஊடகங்கள் அதிகம் என்பதால் உடனேபிரேக்கிங் நியூஸ் போட்டுவிடுகிறீர்கள். ஆனால் எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நமக்கு எளிமையான விவசாயக்குடும்பத்தின் எளியமகன் முதலமைச்சராக கிடைத்துள்ளார். மக்களை சந்திக்கிறார் தொடர்ந்து நல்ல திட்டங்களை தந்துகொண்டிருக்கிறார். அதனால் அதிமுக ஆட்சியில் குறைகள் இல்லை எனக்கூறினார்.