ADVERTISEMENT

ட்ரம்ப் வருகையை முன்னிட்டு குடிசைகளை ஒளித்துவைக்கும் குஜராத் அரசு...

11:17 AM Feb 14, 2020 | kirubahar@nakk…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ள நிலையில் குஜராத்தின் குடிசை பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்த சூழலில், இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்ல உள்ளார்.

இந்நிலையில், அகமதாபாத்தின் இந்திரா பாலத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வரை உள்ள பகுதியில் சாலையுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது. 6 முதல் 8 ஆதி உயரத்தில் எழுப்பப்படும் இந்த சுவர்கள் சாலையில் இருந்து குடிசை பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்படுகின்றன. சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இந்த சுவர் அமையும் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதேபோன்று 2017 ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவும் அவருடைய மனைவி அக்கி அபேவும் இந்தியா வந்தபோது இதே போன்று குஜராத்தை அழகாக்கும் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT