ira

Advertisment

ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என உலக நாடுகளுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இந்நிலையில் இந்தியா, கொரியா உள்ளிட்ட நாடுகள் இறக்குமதியை குறைத்துக்கொண்டதால் இறக்குமதிக்கு அனுமதியளித்தது அமெரிக்கா. இதனையடுத்து ஈரானுடன், இந்திய ரூபாய் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு பாதி தொகை இந்திய ரூபாயில் பணமாக செலுத்தப்படும், மீதி தொகைக்கு பதிலாக இங்கிருந்து பொருட்கள் ஏற்றுமதியும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.