ADVERTISEMENT

சபரியில் இன்று நடை திறப்பு; சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

07:37 AM Nov 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்பட இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி தரிசனமும் நடைபெற இருக்கிறது. இதற்காக இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. sabarimalaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாகப் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் திருவிதாங்கூர் சமஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை நடை திறப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 டிசம்பர் 29 வரை பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சிறப்புப் பேருந்துகளைப் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT