ADVERTISEMENT

தாமதமாக வந்த 'வேகமான ரயில்'... அதிருப்தியில் பயணிகள்...

03:25 PM Feb 18, 2019 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாட்டின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இன்று வணிக ரீதியிலான முதல் பயணத்தை தொடங்கியது. சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டமான முதல் பயணத்தில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலிருந்து டெல்லிக்கு திரும்பியபோது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு டெல்லி வந்தடைந்தது.

இந்நிலையில், ‘வந்தே பாரத்’ ரெயில் வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை இன்று துவங்கியது. இதில் முதல் நாள், முதல் பயணத்தின் போதே ரெயில் ஒரு மணி நேரம், இருபது நிமிடங்கள் தாமதமாக சென்று சேர்ந்தது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். ரெயில் பாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், ரெயில் மெதுவாக சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி பயணிகள் கூறும்போது வரும் காலத்தில், ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படும் என நம்புவதாகவும், பயணம் மிகவும் சவுகரியமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT