ADVERTISEMENT

உ.பி. சட்டப்பேரவை தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு!

12:08 PM Feb 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசம் மாநிலம், சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு பரப்புரை நாளை (08/02/2022) மாலை முடிவடைய உள்ள நிலையில், பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10- ஆம் தேதி தொடங்கி மார்ச் 7- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பரப்புரை நாளை (08/02/2022) மாலையுடன் நிறைவு பெறுகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருவதால், பரப்புரை சூடுபிடித்துள்ளது.

இதையடுத்து, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, அமேதி தொகுதி உள்பட தேர்தலில் போட்டியிடும் மேலும் 45 வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT