ADVERTISEMENT

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய மந்திரி!

04:12 PM Jul 26, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தொடர்ந்து குழந்தை கடத்தவந்ததாக பல நபர்கள் தாக்கப்பட்டு உயிரிழிந்த சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவோரையும், தவறான செய்திகளை பரப்புவோரையும் கண்காணித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதுபோன்ற போலியான செய்திகள் அதிகமாக வாட்ஸ் ஆப் எனப்படும் சமூக வலைதள செயலியே முக்கிய பங்காற்றுகிறது எனவே போலியான செய்திகள் பகிரப்படுவதை தடுக்க தொழிநுட்பமுறையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு மத்திய அரசால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.


இதனை தொடர்ந்து மத்திய தகவல்தொடர்பு மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று மக்களவையில் பேசுகையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அப்பொழுது பேசுகையில்,

போலிசெய்திளை தடுக்க வாட்ஸ்ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனத்திற்கு மத்திய அரசால் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததின்படி ஒரே நேரத்தில் பார்வேர்டு செய்திகளை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுபோல் அனுப்படும் செய்தி பார்வேர்ட் செய்திதானா என அறிய புதிய முறையையும் வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. போலிசெய்திகளால் அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக வதந்திகள் பரப்பப்பட்டு இறுதியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற வழிவகுக்கிறது.

எனவே இனி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கை பயன்படுத்தி போலி செய்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிதித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT