ADVERTISEMENT

“ராமர் கோவில் வரலாற்றை யாராலும் புறக்கணிக்க முடியாது” - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

06:29 PM Feb 10, 2024 | mathi23

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதே சமயம் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் (10.02.2024) நிறைவடைய உள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிலையில், இது தொடர்பான தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது அவர், “அயோத்தியில் ராமர் கோவில் திறப்பால் நீண்டகால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் இயக்கத்தை புறக்கணித்து இந்த நாட்டின் வரலாற்றை யாராலும் படிக்க முடியாது. 1528 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு தலைமுறையும் இந்த இயக்கத்தை ஏதோ ஒரு வடிவில் பார்த்துள்ளது. ஜனவரி 22, வரும் ஆண்டுகளில் ஒரு வரலாற்று நாளாக இருக்கும்” என்று கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT