ADVERTISEMENT

“பெரும் மதக் கலவரம் நிகழலாம்...” - எச்சரிக்கும் உத்தவ் தாக்ரே

11:48 AM Sep 12, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது கோத்ரா சம்பவம் போல் கலவரம் நடக்க வாய்ப்புள்ளதாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அதில்,பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்தியில் இருந்து புறப்பட்ட சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் வைத்து சில மர்மநபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பல பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தை தூண்டியது. இதில் மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே, மீண்டும் இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இது குறித்து மஹாராஸ்டிரா மாநிலத்தில் ஜல்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவசேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, “2024 ஆம் ஆண்டில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழாவின் போது மதக்கலவர சம்பவம் நடக்கும் ஆபத்துள்ளது. எனவே, கோத்ரா சம்பவம் பாணியில் மற்றொரு சம்பவம் நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஏராளமான மக்கள் கூட்டத்தை அரசு அழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும், அவர்கள் திரும்பும் பயணத்தில் கோத்ராவில் நடந்ததைப் போன்ற மற்றொரு சம்பவம் நிகழலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ராமர் கோவில் திறக்கப்படலாம்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT