lakshmi narayanan

Advertisment

கடந்த திங்கள் அன்று செய்தியாளர்களை சந்தித்த உத்திர பிரதேச மாநிலத்தின் கலாச்சாரத் துறை அமைச்சர் லக்‌ஷ்மி நாராயாண் சவுத்ரி, ”நாட்டிலுள்ள பொது மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, அரசு அல்லது எந்த அமைப்பாக இருந்தாலும் செயல்பட வேண்டும். பெரும்பாலான மக்கள் அயோத்தியில் உடனடியாக ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கருதுகிறார்கள்.

இக்கோவில் கட்டப்படுவதின் மூலம் அயோத்தியின் புகழ்பெற்ற மற்றும் பழமையான வரலாற்றை மீட்டெடுக்க முடியும். மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடு மக்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசிப்பார்கள் அதனால் சுற்றுலாத் துறை மேம்படும். எங்களின் முன்னோடி கடவுள் ராமர்தான். உலக வல்லரசு நாடாக இந்தியா உருவானதற்கு ராமரே காரணம்” என்று கூறியுள்ளார்.