ADVERTISEMENT

"அரசாங்கத்தின் அழுத்தத்தால் எனது குரலை அடக்க ட்விட்டர் முயற்சிக்கிறது" - பராக் அகர்வாலுக்கு ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்

11:12 AM Jan 27, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பராக் அகர்வாலுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 27 எனத் தேதியிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி, மத்திய அரசின் அழுத்தத்தால் ட்விட்டர் தனது குரலை மௌனிக்கச் செய்ய முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் கணக்கைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை, தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம்வரை அதிகரித்து வந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தனது ட்விட்டர் கணக்கை புதிதாகப் பின்பற்றுபவர்களின் மாதாந்திர சராசரி குறைந்து, பூஜ்யத்தை நெருங்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர், "எனது குரலை அடக்க அரசாங்கம் பெரும் அழுத்தம் தருவதாக, ட்விட்டர் இந்தியாவில் உள்ளவர்கள் என்னிடம் நம்பத்தகுந்த மற்றும் எச்சரிக்கையான வகையில் தெரிவித்தனர். எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல், எனது கணக்கு சில நாட்கள் முடக்கப்பட்டது. அரசாங்கத்தின் ட்விட்டர் கணக்குகள் உட்பட இன்னும் சில கணக்குகள், (நான் பதிவிட்ட) அதே நபர்களின், அதேமாதிரியான புகைப்படங்களைப் பதிவிட்டன. அந்தக் கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. எனது கணக்கு மட்டும் தனியாக குறிவைக்கப்பட்டது. இந்தியா என்ற கொள்கையை அழிப்பதில் ஒரு சிப்பாயாக ட்விட்டர் ஆக அனுமதிக்கப்படக்கூடாது எனக் கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பில் இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச்சூழலில், தற்போது ட்விட்டர் நிறுவனம், இந்தக் கடிதம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "மேனிப்புலேஷன் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றிற்கு ட்விட்டர் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஸ்பேம் மற்றும் ஆபத்தான ஆட்டோமேஷனை நாங்கள் மூலோபாய ரீதியாகவும், செயற்கை நுண்ணறிவு மூலமும் எதிர்த்துப் போராடுகிறோம், மேலும் ஆரோக்கியமான சேவை மற்றும் நம்பகமான கணக்குகளை உறுதி செய்வதற்கான நிலையான மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம். மேனிப்புலேஷன் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றின் மீதான எங்கள் கொள்கைகளை மீறுவதால் ஒவ்வொரு வாரமும் கோடிக்கணக்கான கணக்குகளை அகற்றி வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

ஆனால் ராகுல் காந்தி தரப்பு இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளது. ராகுல் காந்தி அலுவலகத்தின் டிஜிட்டல் தகவல்தொடர்பு பொறுப்பாளர். "இது ஒரு முழுமையான விளக்கமோ அல்லது திருப்திகரமான பதிலோ அல்ல. நிகழ்வுகளின் காலவரிசை ட்விட்டரின் கூற்றுகளை உறுதிப்படுத்தவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT