rahul

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கைலாஷ் யாத்திரையின் போது 34 கி.மீ தூரம் நடந்ததால் 4,500 கலோரிகளை இழந்தாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று கைலாஷ் மானசரோவாருக்கு புனித யாத்திரிக்கைகாக நேபாளம் காத்மாண்டுவுக்குச் சென்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவர் அங்குள்ள வூட்டு என்னும் ஹோட்டலில் தங்கினார். அப்போது அவர் மாமிசம் சாப்பிட்டதாக உள்ளூர் செய்திகள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பின. இதன் பின்னர், அந்த ஹோட்டல் நிறுவனமே அவர் சைவ உணவுதான் ஆர்டர் செய்து சாப்பிட்டார் என கூறியது.

ராகுல் காந்தி மானசரோவாரில் இருக்கும் ஏரியின் புகைப்படத்தை எடுத்து, அதனுடன் “மானசரோவார் ஏரியின் நீர் மென்மையானது, சலனமற்றது, அமைதியானது. ஏரி நமக்கு பலவற்றை தந்தாலும் அது ஒன்றையும் இழப்பதில்லை. யார் வேண்டுமானாலும் அந்த நீரை பருகலாம். எந்தவித வெறுப்பும் இங்கில்லை. இதனால்தான் இந்தியாவில் அனைவரும் இந்த நீரை வழிபடுகிறோம்” என்று பதிவு செய்திருந்தார்.

இந்தநிலையில் கைலாஷ் யாத்திரையின் போது 34 கி.மீ தூரம் நடந்ததால் 4,500 கலோரிகளை இழந்தாக ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில்தெரிவித்துள்ளார்.