ADVERTISEMENT

மன்னிப்பு கோரிய ட்விட்டர்... பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட கூட்டுக்குழு...

01:23 PM Oct 29, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

லடாக்கின் லே பகுதியைச் சீனாவின் ஒரு பகுதியாகக் காட்டிய விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்திடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு எழுத்துப்பூர்வ விளக்கம் கோரியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து இம்மாத மத்தியில் ட்விட்டரில் நேரலை செய்யப்பட்ட ஒரு வீடியோவில் தவறான ஜியோடேக் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவில் தோன்றிய ட்விட்டர் ஜியோடேக்கின்படி ஜம்மு, காஷ்மீரின் லே பகுதி சீனாவின் பகுதியாகக் காட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை பெற்ற நிலையில், இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளிக்க, 'தனிப்பட்ட தரவு பாதுகாப்பு' குறித்த கூட்டு நாடாளுமன்றக் குழுவின் முன், இன்று ஆஜரான ட்விட்டர் அதிகாரிகள் வாய்மொழி மன்னிப்பு கோரினர். ஆனால், இதற்குக் கடும் அதிருப்தி தெரிவித்த நாடாளுமன்றக் குழு, எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோரவும், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT