ADVERTISEMENT

டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

05:08 PM Apr 17, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி அமலாக்கத்துறை டி.டி.வி.தினகரனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் கடந்த 12/04/2022 ஆம் தேதி பகல் 12.00 மணியளவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரடியாக ஆஜரானார். அவருடன், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், அமலாக்கத்துறையில் ஆஜராக்கப்பட்டு, இருவரையும் ஒன்றாக அமர வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் கடந்த 12/04/2022 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை தினகரனிடம் அமலாக்கத்துறை மொத்தம் சுமார் 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. விசாரணைக்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''சுகேஷ் சந்திரசேகரன் ஒவ்வொருமுறை வரும்பொழுது ஒவ்வொரு வாக்குமூலம் கொடுப்பதால் அமலாக்கத்துறை கேள்விகளை என்னிடம் கேட்கிறது. கேட்பது அவர்களின் கடமை'' என்றார். "இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கில் நான் சொல்ல விரும்புவது நான் நிரபராதி.. நான் எந்த தப்பும் செய்யல... யாரோ கொடுக்கும் ஸ்டேட்மென்ட்டுக்காக என்னை கூப்பிட்டு விசாரிக்கும் கட்டாயம் அமலாக்கத்துறைக்கு இருக்கு. எனவே கூப்பிட்டு விசாரிக்கிறார்கள்'' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி ஆஜராகும்படி தினகரனுக்கு டெல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT