ADVERTISEMENT

தெலுங்கு தேசம் கருத்துக்கு டி.எஸ்.ஆர் எதிர்ப்பு !! மக்களவையில் அமளி!!

11:43 AM Jul 20, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாராளுமன்றத்தில் இன்று சுமார் 11 மணி அளவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தை தெலுங்குதேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் கல்லா தொடங்கினார். பிஜூ ஜனதா தளம் எம்.பிக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல் சிவசேனா கட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை.

சூடுபிடித்த விவாதத்தில் மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திராவிற்கு கொடுக்கப்பட வேண்டிய நியாமான கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ஜெயதேவ் கல்லா விவாதத்தை முன்வைத்தார். அவரின் கருத்துக்கு டி.எஸ்.ஆர் கட்சினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் அமளி நிலவியது.

அதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT