ADVERTISEMENT

2000 திருநங்கைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு....

01:07 PM Sep 18, 2019 | kirubahar@nakk…

2000 திருநங்கைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அசாம் மாநிலத்தில் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 2000 திருநங்கைகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அசாம் மாநிலத்தின் முதல் திருநங்கை நீதிபதியும் இந்த வழக்கின் மனுதாரருமான ஸ்வாதி பிதான் பருவா, "அசாமில் வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெரும்பாலான திருநங்கைகள் பெயர் இடம்பெறவில்லை. 1971-க்கு முந்தைய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. மேலும் தேசிய குடிமக்கள் பட்டியலில் மூன்றாம் பாலினத்தவரை சுட்டிக்காட்ட தனியாக எந்த இடமும் இல்லை. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT