ADVERTISEMENT

வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பரில் ரூபாய் 1.69 லட்சம் கோடியாக உயர்வு!

06:35 PM Oct 16, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி கவலைக்குரிய அம்சமாக மாறியுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பர் மாதம் 22.63% அதிகரித்து, ரூபாய் 2.52 லட்சம் கோடியாக வளர்ச்சிக் கண்டுள்ளது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அதே நேரம் இறக்குமதி 84.77% உயர்ந்து, ரூபாய் 4.17 லட்சம் கோடியாக உள்ளது. செப்டம்பர் மாதம் கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் இறக்குமதி வெகுவாக அதிகரித்திருப்பதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவிற்கு ரூபாய் 1.69 லட்சம் கோடியாக இருக்கிறது. இதற்கு முன்பு வர்த்தகப் பற்றாக்குறையானது, கடந்த 2012- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூபாய் 1.49 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT