Skip to main content

கனிமங்கள் ஏற்றுமதி இறக்குமதியில் மாற்றம்! மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை புதிய கட்டுப்பாடு!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
Import-export


தென் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளான குமரி மாவட்டம் தொடங்கி நெல்லை, தூத்துக்குடி என மூன்று மாவட்டங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் தாது மணலான கார்னட் அதிக அளவில் கிடைக்கிறது. அவைகளை மத்திய மாநில, அரசுகள் அனுமதியோடு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வி.வி.மினரல்ஸ், பீச் மினரல்ஸ், கார்னட் சாண்ட் உள்ளிட்ட பல்வேறு கம்பெனிகள் கார்னட் மணலை வெட்டியெடுத்துத் தரம் பிரிக்கின்றன. அதில் கிடைக்கிற சிர்கான், சிலிமினைட், மோனாசைட், ரூட்டைல், இல்லுமினைட் உள்ளிட்ட கனிமம் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
 

 

 

இந்த தாதுப் பொருட்கள் அதிக அளவில் குறிப்பிட்ட அளவையும் தாண்டி ஆழமாக வெட்டியெடுக்கப்படுவதாகவும், அதோடு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுகிற யுரேனியமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. வரைமுறை தாண்டி ஏற்றுமதியாகும் கனிமங்கள் மூலம் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் கிளம்பின. சமூக ஆர்வலர்கள் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை விசாரித்த உயர்நீதி மன்றம், தாது மணல் வெட்டியெடுப்பதற்குத் தடையை விதித்து அது தொடர்பான விசாரணையையும் மேற் கொண்டு வருகிறது. இந்தத் தடையால் கடந்த எட்டுமாதத்திற்கும் மேலாகக் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படாமல் முடங்கியது. நூற்றுக்கணக்கானவர்களின் வேலை வாய்ப்பும் கேள்வியானது.
 

 

 

இதனிடையே மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையைக் கொண்ட வர்த்தகத்துறை, கனிமங்கள் ஏற்றுமதியில் மாற்றம் செய்து புதிய அரசாணையைப் பிறப்பித்துள்ளது.
 

21.08.2018 நாளிட்ட அதன் அறிவிப்பாணை நிர் 26 2015 – 2020ன்படி, கனிமங்கள் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

சக்தி கொணட் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையான வளர்ச்சி மற்றும் சீர்திருத்தச் சட்டம் 1992ன் பிரிவு 3ன்படி, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையான 2015 – 2020ன்படி, மத்திய அரசு, கனிமங்கள் ஏற்றுமதியில் (பீச் மினரல்ஸ்) புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது உடனடியாக அமலுக்கு வருகிறது.
 

குறிப்பிட்ட தொகுப்பு எண் 26 ஷெட்யூல்ட் 2ன் படி ஏற்றமதி இறக்குமதி வகைகள் 2018படி கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 

ஏற்றுமதிக்குள்ளனான கனிமவகையான சாண்ட் மினரல்களின், இல்லுமினைட், ரூட்டைல், லீகோசின், (டைட்னியம் அடங்கியது) சிர்கான், கார்னட், சிலிமனைட், மற்றும் மோனசைட் உள்ளிட்டவைகள் ஒழுங்கு படுத்தப்பட்டு வரிசை என் 98ஏ,யின் தொகுப்பு 26 ஷெட்யூட் 2ன் ஐ.டி.சி., வகைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
 

 

 

2617 கோட்படி, மற்றக் கனிமங்கள் வழக்கமான திட்டப்படி ஏற்றுமதி செய்யலாம். ஆனால் மேற் சொல்லப்பட்டவைகள், 1962 அணுசக்தி சட்டத்தின் கட்டுப்பாட்டில் வருபவைகள். வரிசை எண் 98ஏ, உட் பிரிவு தொகுப்பு 26, ஷெட்யூல்ட் 2ஆஃப் ஐ.டி.சி.ன்படி அவைகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுவது தற்போது இந்தியன் ரேர் எர்த் லிமிடட்டின் கட்டுப்பாட்டிற்குள் வருவதாகத் தெரிவித்து அரசாணை பிறப்பித்திருக்கிறார் வெளி நாட்டு வர்த்தகப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் அலோக் வர்த்தமான் சதுர்வேதி.
 

இந்தக் கட்டுப்பாட்டுத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதன் மூலம் தொடர்புடைய நிறுவனங்கள் நேரிடையாக ஏற்றுமதி செய்யப்படும் முறைக்கு செக் வைத்து விட்டது மத்திய அரசு.


 

 

\
 

சார்ந்த செய்திகள்