ADVERTISEMENT

தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த மத்திய அமைச்சர்!

01:41 PM Jul 01, 2019 | santhoshb@nakk…

நாடாளுமன்றத்தில் இன்றைய கூட்டத்தொடரில் காரசார விவாதம் நடந்தது. மக்களவையில் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கூறி மக்களவையில் நோட்டீஸ் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதில் தமிழகத்தில் உள்ள காவிரிப்படுகையில் ஆய்வு செய்யாமல் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். அதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட எந்த திட்டத்தையும் தமிழகத்தில் வலுக்கட்டாயமாக திணிக்காது மத்திய அரசு என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த திட்டம் தொடர்பாக முழுமையாக விவாதிக்க தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசும் போது ஆவணக்கொலை தொடர்பாக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT