ADVERTISEMENT

ஜம்முவில் திருப்பதி தேவஸ்தான கோயில்; குடமுழுக்கு விழா தேதி அறிவிப்பு

05:52 PM May 22, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜம்முவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி திருமலையில் மக்கள் கூட்டத்தால் நெரிசல், தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க முடியாத வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களிலும் ஏழுமலையானுக்கு கோயில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தான அமைப்பு தொடங்கி வருகிறது.

அதன்படி கன்னியாகுமரி, சென்னை, டெல்லி, புவனேஷ்வர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 5 இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் 6வது கோவில் ஜம்முவில் கட்டப்பட்டு வந்தது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதம் 8ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தான அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து அன்றைய தினமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT