ADVERTISEMENT

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் இனி தூக்கு;முன்ஜாமீன் ஜாமின் கிடையாது; மக்களவையில் நிறைவேற்றம்!

10:17 AM Jul 31, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினால் தூக்குத்தண்டனைக்கு வழிசெய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஷ்மீரில் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை மற்றும் உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி கும்பலால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் என இந்த இரு சம்பவங்களும் மக்கள் மனதில் பெரும் கண்டனத்தையும் இதுபோன்ற சிறார் கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற செய்தது.

இந்நிலையில் தொடர்ந்து வரும் சிறார் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் தற்போது புதிய சட்ட மசோதா ஒன்று மக்களவையில் கடந்த 23-ஆம் தேதி மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அந்த புது சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது,

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக தூக்கு தண்டனை.

16 வயதிற்கு உப்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தால் சிறைத்தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தின் அடிப்படையில் சாகும்வரை சிறைத்தண்டனையும் விதிப்பப்படும்.

12 லிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் சாகும்வரை சிறை.

பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கினால் சிறை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 12 முதல் 16 வயது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப்பாலியால் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டால் குற்றம் சுமத்தப்பட்டவர்க்கு குற்றச்சாட்டின் கீழ் முன்ஜாமீன் வழங்கப்படாது போன்றவை அந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக இருந்தது.

அப்படி இருக்க நேற்று மக்களவையில் இந்த புது மசோதாவின் மீதான விவாதத்தில் குரல் வாக்கெடுப்பிற்கு பிறகு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT