ADVERTISEMENT

மாநிலங்கள் முறையாக டவர்களை அமைப்பதில்லை - அருணா சுந்தர்ராஜன்

01:19 PM Dec 18, 2018 | tarivazhagan

இந்திய தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் நேற்று (திங்கள்கிழமை) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகளுடன், பாரத் நெட் தொலைத்தொடர்பு சேவை எந்த அளவில் உள்ளது மேலும் மாநிலங்கள் தொலைத்தொடர்பு சேவைகளை கொடுப்பதில் முறையாக செயல்படுகிறதா என்று ஆராய கூட்டம் நடத்தினார். பாரத் நெட் தொலைத்தொடர்பு சேவை என்பது இந்திய கிராமப்புறங்களை அதிவேக இண்டர்நெட் சேவை மூலம் இணைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். ஆனால் இன்றளவும் இது பெரும்பாலான கிராமங்களில் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்து பேசிய அருணா சுந்தர்ராஜன் “மாநிலங்கள் முறையாக தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்த டவர்களை அமைப்பதில்லை. மேலும் கிராமப்புறங்களில் உள்ள தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தி நடைமுறைப்படுத்தவில்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனமும் பணிகளை சிறப்பாக செய்வதில்லை. இதே நிலை இன்னும் இரண்டு மாதங்கள் நீடித்தால் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் பணி தனியார்மயம் ஆக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குறிப்பாக தொலைத்தொடர்பு துறை புள்ளியியல் படி, உத்தர பிரதேசம் மாநிலத்தில் 28,000 கிராமப்புற தொலைத்தொடர்பு டவர்களில் வெறும் 151 மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் 15,126 கிராமப்புற டவர்கள் சேவைகளில் 338 டவர்கள் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 12,687 கிராமப்புற டவர்கள் சேவையில் 899 மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு துறை அருணா சுந்தர்ராஜன் மேலும் “தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்கள் மட்டுமே 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்குவதில் ஆர்வம் காட்டிவருகின்றன” என தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT