ADVERTISEMENT

இந்தி திணிப்பு; “ஜிப்மர் முன்பு போராடுபவர்கள் நோயாளிகளுக்கு எதிரானவர்கள்” - தமிழிசை  

04:07 PM May 10, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய பொருட்கள் மற்றும் சேவைவரி துறை சார்பாக ‘அசதி க அம்ரித் மஹோத்சவ’ என்கிற 75வது சுதந்திர நினைவை கொண்டாடும் வகையில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சேவைவரி துறை அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறும்போது, "புதுச்சேரி வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. 8500க்கும் மேற்பட்ட வரி செலுத்துபவர்கள் புதுச்சேரியில் உள்ளனர். இந்த ஆண்டு முதல்முறையாக ஜிஎஸ்டி வருவாயாக 600 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அரசாங்கம் பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியதால் இந்த வருவாய் நமக்கு கிடைத்துள்ளது. இதனால் நாம் அனைவரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும்.

ஜிப்மர் மருத்துவமனையில் எங்கேயும் இந்தி திணிப்பு இல்லை. மக்களுக்கு அளிக்கப்படும் அத்தனை தகவல்களும் அறிக்கைகளும் தமிழில்தான் உள்ளது. தமிழ் பிரதானம் அதற்குப்பிறகு ஆங்கிலம், அதற்கு பிறகுதான் இந்தி. அங்கு பணிபுரிபவர்கள் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். பல இயக்கங்கள் போராட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறான ஒரு அணுகுமுறை. அது ஒரு மருத்துவமனை. பல ஊர்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் 60 சதவீதத்திற்கு மேல் நோயாளிகள் அவசர மருத்துவ சேவைக்கு வருகிறார்கள். அரசியல் கட்சிகள் போராட்டம் நடைபெறுவதால் மக்களுக்கு அது இடையூறாக உள்ளது. ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்துபவர்கள் நோயாளிகளுக்கு எதிரானவர்கள் என்றுதான் சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT