ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு... அரசியல்வாதிகளுக்கு கிடுக்குப்பிடி...

11:23 AM Feb 13, 2020 | kirubahar@nakk…

கிரிமினல் பின்புலம் கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக அனுமதிப்பதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக இன்று விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேட்பாளர்களின் வழக்குகள், குற்ற விவரங்கள், விசாரணை நிலை மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்த விவரங்களை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தல் சமயங்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன் கட்சி இணையதளங்களில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும், வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடமும் இந்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT