ADVERTISEMENT

கிரிப்டோகரன்சி பயன்பாடு... தடையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...

12:03 PM Mar 04, 2020 | kirubahar@nakk…

கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீதான ரிசர்வ் வங்கியின் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 2018 -ல், கிரிப்டோகரன்சி மூலம் இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. கண்ணுக்கு தெரியாத எலக்ட்ரானிக் பணமான கிரிப்டோகரன்ஸியை பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் நடக்கும் என்பதாலும் ஆர்.பி.ஐ இந்த தடையை விதித்தது. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீதான ரிசர்வ் வங்கியின் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கான தடையை நீதிமன்றம் ரத்து செய்திருந்தாலும், கிரிப்டோகரன்சி வாங்குதல், வைத்திருத்தல், விற்பனை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு எதிராக மத்திய அரசு மசோதா ஒன்றை ஏற்கனவே தயார் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT