/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/few_1.jpg)
மத்திய நிதியமைச்சகத்தில் பொருளாதார விவகார செயலாளராக பணியாற்றிவந்த சக்திகாந்த தாஸ், கடந்த 2018ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 10ஆம்தேதியோடு முடிவடைய இருந்தது.
இந்தநிலையில், அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான முன்மொழிவுக்குப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடங்கியஅமைச்சரவை நியமனக் குழு நேற்று (28.10.2021) மாலை அனுமதியளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மறு நியமனம் செய்யப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ், இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதிக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கோ அல்லது மறுஉத்தரவு வரும்வரையிலோ அந்தப் பொறுப்பில் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மறுநியமனம் செய்யப்பட்ட முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராகியுள்ளார் சக்திகாந்த தாஸ். அதற்கு முன்னதாக பாஜக ஆட்சியில் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன்,தனது முதல் பதவிக்காலம்முடிந்ததும் கல்வி பணிக்குத் திரும்பினார். அவரை தொடர்ந்து பதவியேற்றஉர்ஜித் படேல் மத்திய அரசுடனானமோதல் காரணமாக முதல் பதவிக்காலத்தின் பாதையிலே இராஜினாமா செய்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)