ADVERTISEMENT

தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் இனி உச்சநீதிமன்ற தீர்ப்புகள்!

08:30 PM Jul 17, 2019 | santhoshb@nakk…

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் தமிழ்,மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் மொழி பெயர்ப்பு மூலம் ஆங்கிலம் தெரியாத வரும், மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எளிதாக படிக்கலாம்.

அதே போல் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை அனைவரும் எளிதாக படிக்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் தமிழ் மொழி இடம் பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT