ADVERTISEMENT

ராகுல் காந்தி தொகுதி தேர்தலுக்கு எதிரான வழக்கு; சரிதா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்...

04:06 PM Nov 02, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராகுல் காந்திக்கு எதிராக சரிதா நாயர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், 'வயநாடு' தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் அவர் போட்டியிட்ட அதே தொகுதியில் சோலார் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். 'வயநாடு' மற்றும் 'எர்ணாகுளம்' ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தநிலையில், சோலார் ஊழல் விவகாரத்தில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருடைய வேட்புமனுவைத் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.

அதன்பின்னர், இந்தத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலுக்கு எதிராக, அவர் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைக் கேரளா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. பின்னர் இந்தத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்ரமணியன் அடங்கிய அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், சரிதா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT