Rahul Gandhi is visiting Tamil Nadu today

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கர்நாடகா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை விமர்சித்த அவர், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று பேசியிருந்தார். இதற்கு, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ பூர்னேஷ் குமார், ‘மோடி சமூகத்தை ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டார்’ என குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனைக்குத் தடை விதித்து உத்தரவிடக் கோரி ராகுல் காந்தி சார்பில் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,விசாரணை முடிவில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து எம்.பி பதவியை மீண்டும் பெற்றதையடுத்து ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டார். மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கடந்த 9 ஆம் தேதி கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

“ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதை பார்த்ததே இல்லை” - ராகுல் காந்தி

இந்நிலையில் மீண்டும் எம்.பி, பதவியை பெற்றதையடுத்து முதல் முறையாக தனது மக்களவை தொகுதியான கேரள மாநிலத்தின் வயநாட்டிற்கு இன்று நாளையும் என இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் ராகுல் காந்தி அங்கிருந்து சாலை மார்க்கமாக உதகை செல்கிறார். அங்கு முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை ராகுல் காந்தி சந்தித்துப் பேசுகிறார். அதனைத்தொடர்ந்து கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்துப் பேச உள்ளார். இதனைத்தொடர்ந்து வயநாடு புறப்பட்டுச் செல்ல உள்ளார். ராகுல் காந்தியின் வருகையையொட்டி உதகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.